November 2, 2017 தண்டோரா குழு
இஸ்ரேல் நாட்டிலுள்ள மதுபான விடுதியில்,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு 25சதவீதம் தள்ளுபடி அளிக்கும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலுள்ள, ‘அன்னா லூலூ’ மதுபான விடுதியை மொரன் பாரிர் மற்றும் டானா எட்கர் என்னும் இரண்டு பெண்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள், ‘ப்ளடி ஹவர்’ என்னும் புதிய திட்டத்தை அந்த மதுபான விடுதியில் அறிமுகம் செய்துள்ளனர்.அதன்படி,விடுதிக்கு வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்,அவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
“மதுப்பான விடுதிக்கு சென்று, வைன் ஆர்டர் செய்தேன். நான் ஆர்டர் செய்தது சிவப்பு வைனா அல்லது அல்லது வெள்ளை வைனா என்று அங்கு பணிபுரியும் ஊழியருக்கு புரியவில்லை. எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது, அதனால் சிவப்பு வைன் கொண்டு வாருங்கள் என்று அவரிடம் கூறினேன்.அந்த சூழ்நிலையில்தான், ‘ப்ளடி ஹவர்’ திட்டம் குறித்த யோசனைஎனக்கு வந்தது என்று கூறுகிறார் மதுபான விடுதியின் உரிமையாளர் பாரிர்.
மேலும்,பெண்களுக்கு ஏற்பாடும் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘ப்ளடி ஹவர்’ திட்டம் ஒரு நல்ல வழியாகும்”.