November 2, 2017
tamilsamayam.com
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடாில் பட்டம் வென்ற இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் தரவாிசைப்பட்டியலில் நம்பா் – 1 இடத்தை பிடிப்பதை காட்டிலும், தொடா்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கம் என்று தொிவித்துள்ளாா்.
பிரான்ஸ் தலைநகா் பாாிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடாில் ஆண்கள் ஒற்றையா் பிாிவில் ஜப்பான் வீரரை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். மேலும், ஒரே காலாண்டா் வருடத்தில் 4 சூப்பா் சீாியஸ் பட்டங்களை வென்ற முதல் இந்திய வீரா் என்ற சாதனையையும் படைத்துள்ளாா். தொடாில் பட்டம் வென்றதைத் தொடா்ந்து ஸ்ரீகாந்த் தரவாிசைப்பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டாா்.
பட்டம் வென்ற பின்பு தாயகம் திரும்பிய ஸ்ரீகாந்திற்கு ஐதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசுகையில், கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்தன. இந்த ஆண்டில் 4 சூப்பா் சீாிஸ் பட்டங்களை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
தரவாிசைப்பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் தரவாிசைப்பின்னால் நான் ஓட விரும்பவில்லை. தொடா்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவதே எனது நோக்கம். எனது பயிற்சியாளா் கோபி எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தாா். அவருக்கே அனைத்து பெருமைகளும் சேரும் என்று தொிவித்தாா்.