June 22, 2016 தண்டோரா குழு
இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் பகுதியை சேர்ந்த ஒரு 29 வயது பெண் ஒன்பது மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த சாரா வார்டு, என்னும் பெண் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பிரெட்டி என்ற ஆண் குழந்தைக்குத் தாயானார். பின்னர் ஒரே வாரத்தில் மீண்டும் கர்ப்பமுற்ற அவர் இந்த முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
ஒன்பது மாத இடைவெளியில் மொத்தம் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை செய்துள்ள இந்தப் பெண் அனைத்துக் குழந்தைகளையும் நார்மல் டெலிவரியில் பெற்றெடுத்து இருக்கின்றார் என்றால் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும்.
சாரா வார்டு மற்றும் அவருடைய கணவர் பென் ஸ்மித் ஆகிய இருவரும் தற்போது தங்களது நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
தங்கள் குழந்தைகளுக்கு வாரம் ஒன்றுக்கு 80 பாட்டில்கள் பால் மற்றும் 175 உள்ளாடைகள் தேவைப்படுவதாக பென் ஸ்மித் கூறினார்.
மேலும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர்களுடைய குழந்தைகளுக்கு செலவு செய்து வருவதாகவும் பென் கூறினார். ஆனால் கண்டிப்பாக இந்தக் குழந்தைகளோடு நிறுத்திவிடுவோம். இனிமேல் தங்களுக்கு வேறு குழந்தைகள் தேவையில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நான்கு குழந்தைகள் குறித்து குழந்தைகளின் தாய் சாரா வார்டு கூறும்போது, அவர்களுடைய வீடு சில சமயங்களில் நர்சரி பள்ளி போல் தோற்றமளிக்கிறது என்றும் இரண்டாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.