November 3, 2017
tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி – முக்கால் கப் (வேகவைத்தது)
அரிசி மாவு – அரை கப்
கடலை மாவு – அரை கப்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பழ உப்பு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி (வழவழப்பிற்கு மற்றும் சமையலுக்கு)
தக்காளி – அரை கப் (நறுக்கியது)
கேரட் – அரை கப் (துறுவியது)
பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
பாலாடைக்கட்டி (பன்னீர்) – 4 தேக்கரண்டி (துறுவியது)
தண்ணீர் – தேவையான அளவு
செய்றை
நன்கு வேகவைத்த பச்சை பட்டாணியை மசித்து அதை ஒரு பேஸ்ட் போன்று மாற்றவும்.இப்போது, மசித்த பட்டாணியை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும்.
மெதுவாக தண்ணீர் சேர்த்து அதை தொடர்ந்து கலக்கவும். கலவை ஒரு தடிமனான நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கலக்கவும். அதன் பின்னர் பழ உப்பைச் சேர்க்கவும். கலவையை நன்கு கலக்கவும். அடிக்கக் கூடாது. அதுவும் பழ உப்பை கலந்த பின்னர் கலவை நன்றாஅ ஒன்று சேரும் வரை தொடர்ந்து நன்கு கலக்கவும்.
ஆனால் கலவையை அடித்து கலக்கி விடாதீர்கள். அவ்வாறு அடித்தீர்கள் எனில் கேக் பஞ்சு போல் உப்பி வராது.இப்போது, ஒரு தட்டையான நான்ஸ்டிக் பேனை எடுத்து சூடுபடுத்தவும். அதன் பின்னர் அதில் எண்ணெய் தடவவும். இவ்வாறு செய்வது கேக்கை எளிதாக திருப்ப உதவும்.
இப்போது, கலவையை ஒரு கரண்டியால் எடுத்து பான் மீது ஊற்றவும். இது ஒரு சிறிய கேக்கை உருவாக்கும்.இறுதியாக கேக்கின் மீது துறுவிய பாலாடைக்கட்டி, தக்காளி, கேரட் மற்றும் சிறிதளவு எண்ணெயைத் தெளித்திடுங்கள்.
இப்போது, கேக்கை திருப்பிப் போட்டு அதை அடுத்த பக்கத்திலும் வேக விடுங்கள்.இப்பொழுது உங்களுடைய பச்சை பட்டாணி கேக் பறிமாறத் தயாராக இருக்கின்றது. இதை சூடாக பரிமாறவும்.