November 3, 2017 தண்டோரா குழு
அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக செயலிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு வியாழக்கிழமை(நவம்பர் 3) சுமார் 11 நிமிடங்கள் தற்காலிகமாக செயலிழந்தது.ஆனால், அவருடைய கணக்கு சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது பணியின் கடைசி நாளின் போது ட்விட்டரில் உள்ள அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்பின் தனிப்பட்ட கணக்கை சுமார் 11 நிமிடங்கள் செயலிழக்க செய்துள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அவருடைய கணக்கு சரிசெய்யப்பட்டது. இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். மீண்டும் இது போன்ற தவறு நேராத படி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவிதுள்ளது.
ட்விட்டர்ல் தீவிரமாக இயங்கிவரும் அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்பை சுமார் 40 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவருடைய கணக்கை காண முயன்றபோது, ‘மன்னிக்கவும் அந்த பக்கம் இல்லை’ என்ற தகவல் வந்தது.
வடகொரியாவிற்கு எதிராக டிரம்ப் அச்சுறுத்தல்களை தெரிவித்தபோதே, ட்விட்டரில் உள்ள அவருடைய கணக்கை தற்காலிகமாக நிறுத்துமாறு பலஅழைப்புகள் வந்துள்ளன. டிரம்ப் தன்னுடைய கணக்குகளை தானே செயலிழக்கச் செய்திருக்கலாம் அல்லது அவருடைய கணக்கை ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர்.