November 4, 2017
tamilsamayam.com
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி நடைபோடும் இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டம் முதல் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி லீக் போட்டிகளில் சிங்கப்பூரை 10-1 எனவும் சீனாவை 4-1 எனவும் மலேசியாவை 2-0 எனவும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் கஜகஸ்தான் அணியை 7-1 என மண்ணைக் கவ்வ வைத்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியில் எதிர்த்து களமிறங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் தங்கள் அபார ஆட்டத்தை வழக்கம் போல் வெளிப்படுத்தி 4 கோல்களை போட்டனர். ஜப்பான் அணி கடும் போராட்டத்துக்கு மத்தியில் வெறும் 2 கோல்களை மட்டுமே அடித்தது. இறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
இதன் மூலம் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி நாளை மறுநாள் (நவம்பர் 5ஆம் தேதி) ஜப்பான் அணியுடன் கோப்பை வெல்ல பலப்பரீட்சை நடத்துகிறது.