November 6, 2017
tamilsamayam.com
பெண்கள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், இரட்டைசதம் விளாசி அசத்தினார்.
இந்தியாவில் 19 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் தொடரைப்போல, பெண்களுக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பை அணி, சவுராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி நடந்தது.
இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 202 ரன்கள் விளாசினார். இப்போட்டிக்கு முந்தைய போட்டியில், ஜெமிமா 178 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட்டில், இரட்டைசதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் ஜெமிமா.
முன்னதாக கடந்த 2013ல் தற்போது இந்திய அணியின் துவக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 224 ரன்கள் எடுத்தார்.
இரண்டு விளையாட்டுகள்:
தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இரட்டைசதம் அடித்த ஜெமிமா, தனது 13வது வயதில் மும்மை, மகாராஷ்டிரா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்றார்.