November 7, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக், டெய்லருக்கு ஆதார் எண் பெற முடியுமா என்று ட்விட்டரில் கேலி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி, சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல்நாள் போட்டியில், நியூஸிலாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.
இதுகுறித்து சேவாக், டெய்லர் என்ற பெயரை உருதில் மொழி பெயர்த்து தையல்காரர் என்ற பொருள் கொள்ளும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்,.
இதற்கு இந்தியில் பதிலளித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், ”ராஜ்கோட் போட்டிக்குப் பிறகு டெய்லர் கடை மூடப்பட்டுள்ளது என்றும் அடுத்த தையல் பணி திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்க உள்ளது. அவசியம் வாருங்கள்” என்றும் பதில் ட்விட் கொடுத்தார்.
இதைக் குறிப்பிட்டு சேவாக், ”டெய்லரின் சிறப்பான இந்திப் புலமைக்கு அவரால் ஆதார் எண்ணைப் பெற முடியுமா?” என்று ஆதார் நிறுவனத்திடம் ட்விட்டரில் கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், ”மொழி பிரச்சினையல்ல. ஆதார் பயனரின் குடியுரிமையே முக்கியம்” என்று தெரிவித்துள்ளது.
மீண்டும் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் ”எவ்வளவு வேடிக்கைகளைப் பார்த்தாலும், கடைசியில் அரசாங்கத்தின் வேடிக்கைதான் சிரிப்பை வரவழைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சேவாக்கின் இந்த ட்விட்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.