November 7, 2017 தண்டோரா குழு
விமானத்தில் பயணம் செய்த போது,கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டையால் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கத்தார் விமானநிலையத்திலிருந்து இந்தோனேசியா நாட்டின் பாலிக்கு செல்ல QR 962 கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(நவம்பர் 5) புறப்பட்டது.இந்த விமானத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கணவன் தூங்கிவிட்டார். அவருடைய மனைவி, கணவரின் ஸ்மார்ட் போனை இயக்க முயன்றார். ஆனால், அதை இயக்க வேண்டுமென்றால், கணவரில் கைரேகையை அதிலுள்ள ஸ்கேனில் பதிவாக வேண்டும். அந்த பெண், தூங்கிக்கொண்டிருந்த கணவரின் கைரேகை பயன்படுத்தி, இயக்க செய்தார்.
அப்போது, தான் தன்னுடைய கணவருக்கும் மற்றொரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபம் அடைந்த அவர், சத்தம் போட்டு தனது கணவரிடம் கடுமையாக சண்டையிட்டார். விமான ஊழியர்கள் அவரை சமாதனப்படுத்த முயன்றனர். அவர்களையும் திட்டியுள்ளார்.
இதனையடுத்து விமான ஊழியர்கள், விமானியிடம் தகவல் தந்தனர். தகவல் அறிந்த அவர், என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் பறந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து சென்னை விமானநிலையம் அருகிலிருந்ததால், தகவல் கொடுத்து அவசரமாக விமானம் தரையிறங்க அனுமதி பெற்றுக்கொண்டு, சென்னை விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
விமானத்திலிருந்த ஈரானிய தம்பதினர் குழந்தையுடன் கீழே இறக்கிவிடப்பட்டனர்.அதன் பிறகு, கத்தார் விமானம் தனது பயணத்தை மேற்கொண்டது.