November 7, 2017 தண்டோரா குழு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமான கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியானது தவறான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.இவை இரண்டு அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை பெரிதும் பாதித்த திட்டம் அறிவிக்கப்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இந்த திட்டத்தினால், லாபம் மற்றும் பலன் குறித்து அரசு புதிதாக எந்த அறிக்கையும் அரசு வெளியிடவில்லை. இந்த திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் ஏற்கனவே கூறியதை திரும்பி கூறுகிறேன். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்பது அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை. சட்டப்பூர்வமான திருட்டு எனக்கூறினார்.