June 23, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தானைச் சேர்ந்த மத குரு ஒருவர், கவர்ச்சி மாடல் அழகியுடன் செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2016T20 இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக்கூறி சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் குவான்டீல் பலூச்சு.பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருபவராவார்.
இவர், அண்மையில் ரூயத் இல ஹிலால் கமிட்டி மற்றும் தேசிய முஷாயிக் கவுன்சில் ஆகியவற்றின் உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தான் மதகுரு முப்தி அப்துல் குவாவி அழைத்த இப்தார் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அப்போது இருவரும் சிரித்தபடி போஸ் கொடுத்து செல்பி எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், தற்போது 2 இஸ்லாமிய மத அமைப்புகளிலிருந்து அவரைத் தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.இதுகுறித்து பாகிஸ்தான் மத விவகாரத்துறை அமைச்சர் சர்தார் யூசுப் கூறுகையில், சம்பந்தப்பட்ட மதகுரு முப்தி அப்துல் குவாவியை, ரூயத் இல ஹிலால் கமிட்டி மற்றும் தேசிய முஷாயிக் கவுன்சில் ஆகியவற்றின் உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முக்கிய நிகழ்ச்சிகள் எதிலும் குவாவி பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முப்டி குவாவி, குவாண்டீல் பலூச் எனது மகள் போன்றவர் எனவும் அவரை நல்வழிப் படுத்துவதற்காகவே இப்தார் நிகழ்ச்சிக்கு நான் அழைத்தேன் எனவும் கூறியுள்ளார்.