November 8, 2017 தண்டோரா குழு
சீனாவில் நடந்த மருத்துவருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் கலந்துக்கொண்ட ‘ரோபோ’ வெற்றி பெற்றுள்ளது.
சீனாவில் மருத்துவர்களுக்கான தேசிய அளவு தகுதி தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அந்த தேர்வில் சுமார் 53௦,௦௦௦ பேர் கலந்துக்கொண்டனர்.
சீனாவின் சிங்க்ஹுவா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐபிளைடெக்’ நிறுவனம் இணைந்து ‘ரோபோ’ ஒன்றை தயாரித்தனர். அவர்கள் தயாரித்த ரோபோவும் மருத்துவர் தகுதி தேர்வில் கலந்துக்கொண்டது.
தேர்வின் மேற்பார்வையாளர் கண்காணிப்பில், அந்த ரோபோவிற்க்கு நியமிக்கப்பட்ட அறையில் இணையத்தள உதவியோ அல்லது சிக்னல் உதவியோ இல்லாமல், அந்த தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்களுடன், அந்த ரோபோ தேர்வு எழுதியது. தேர்வில் ஏமாற்று வேலை ஏதும் நடக்காமல் இருக்க, அந்த தேர்வு கேமராவில் பதிவு செய்யப்பட்டது.
சீனாவின் தேசிய மருத்துவ பரிசோதனை மையம், அந்த தேர்வின் முடிவுகளை நேற்று(நவம்பர் 7) வெளியிட்டது. அதில் அந்த ரோபோ 456 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற்றுள்ளது.