November 8, 2017 தண்டோரா குழு
பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று(நவம்பர் 8) காலை சுமார் 7.26 மணியளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் வேவாக் என்னும் கடற்கரை நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்திலும், 7௦ கிலோமீட்டர் பூமிக்கடியில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.