November 8, 2017 தண்டோரா குழு
ட்விட்டரில் 140 வார்த்தைகளை கொண்டு ட்விட் செய்து வந்த வாடிக்கையாளர்கள், இனிமேல் 280 வார்த்தைகளில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தளமான ட்விட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 140 வார்த்தைகளை கொண்டு தான் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால்,வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 140 வார்த்தைகளை கொண்டு சொல்ல சிரமப்பட்டனர்.இந்நிலையில் ட்விட்டர் பதிவுகளில் எழுத்துக்களின் எல்லையை 140 என்பதில் இருந்து இருமடங்கு அதிகரித்து 280 ஆக மாற்றியது.
ட்விட் செய்யும் வார்த்தைகளை அதிகரிப்பதன் மூலம், சமூக வலைத்தள மேடையை எளிதில் மக்கள் பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் ஆங்கிலம், ஸ்பானிஷ், போச்சுகீசு ஆகிய மொழிகளில் மட்டுமே 280 எழுத்துக்கள் வரை கொண்ட பதிவுகளை எழுத முடியும் என்று இருந்த நிலையில்,இன்று முதல் 280 எழுத்துக்களை பயன்படுத்தும் வசதி அனைத்து மொழிகளுக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டது.