November 9, 2017
தண்டோரா குழு
இந்திய அணி வெற்றி பெற சூப்பர் ஸ்டார் பும்ரா தான் காரணம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி இரண்டு தொடர்களையுமே 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி, 68 ரன்கள் என்ற சிறிய இலக்கை சிறப்பாக தடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதற்கு பும்ரா தான் முக்கிய காரணம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,
” எதிரணி வீரர்களை ரன்கள் எடுக்க விடாமல் தடுக்கும் எல்லா வித்தைகளும் பும்ராவுக்கு தெரியும். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து வீரர்கள் அதிகளவில் பந்தின் வேகத்தை குறைத்து பவுலிங் செய்தனர். இதை கவனித்து பும்ரா, புவனேஷ்வரிடம் தெரிவித்தேன். ஆனால் களத்தில் சிறப்பாக பும்ரா செயல்படுத்தினார். தவிர, கடைசி நேரத்தில் யார்க்கர் வீசுவதிலும், ரன்களை கட்டுப்படுத்துவதிலும் பும்ரா சூப்பர் ஸ்டார்.” என்றார்.