November 9, 2017 தண்டோரா குழு
யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிகுந்த நகரங்களில் சென்னை முதல் முறையாக இணைந்துள்ளது.இசைத்துறையில் சென்னை சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், அதை பாராட்டி, யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது.
கடந்த2004ஆம்ஆண்டுமுதல்கைவினைபொருட்கள்,நாட்டுப்புறக்கலை,நகரவடிவமைப்பு,திரைப்படம்,
இலக்கியம்,இசை ஆகிய ஏழு பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று யுனெஸ்கோ அமைப்பு சிறப்பிக்கிறது.
மேலும்,இந்தியாவிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி, ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.