November 9, 2017 தண்டோரா குழு
ஹைதாராபாத்தில் சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை, அங்குள்ள மறுவாழ்வு மையத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில், புதன்கிழமை
(நவ 8)காவல்துறை ஆணையர் எம். மகேந்திர ரெட்டி, ஹைதராபாத் நகரை பிச்சைகாரர்கள் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அதன்படி, ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில்இருக்கும் பிச்சைக்காரர்களை,சஞ்சலகுடா சிறைச்சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் பலர் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கின்றனர் என்றும் மாற்றுத்திறனாளிகள் பிச்சை தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும் அதனால் பொதுமக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது என்று வந்த புகாரை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, நவம்பர் 8ம் தேதி 6 மணி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி காலை 6 மணி வரை பின்பற்றப்படும். இதை மீறுபவர்களை, இந்திய குற்றவியல் பிரிவின் 188வது பிரிவின் கீழ் சட்டம் 1348 மற்றும் பிச்சை தடுப்பு சட்டம், 1977 மற்றும் சட்டம் ஜே.ஜே. 2000 ஆகியவற்றின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஹைதராபாத் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.