November 9, 2017 தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்றது.
கோவை பீளமேட்டில் உள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி நவக்கிரக ஆலயங்கள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் புதிய ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குக்குள் நடந்தது.
மேலும் காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, கும்ப பூஜை, வேதிகா பூஜை, துவார பூஜை, யாக பூஜை, மகாபூர்ணாஷதி,மகாதீபாராதனை, மந்திர புஷ்பங்கள், தேவாரங்கள் ஆகிய பூஜைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து ஆதி விநாயகர், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோபுரம், மூல மூர்த்திகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டும் நடந்தது.
கும்பாபிஷேகத்தை கோவில் அர்ச்சகர் டி.எஸ்.உமாசங்கர் குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனையும், 12.30 மணிக்கு மேல் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மஞ்சள் நீர் வசந்தம் ஆகிய நிகழ்ச்சிகளும், 10ம் தேதி மண்டல பூஜை, ஸ்ரீ வள்ளியம்மன் தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவமும், மாலை 5 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.