• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இவங்க இரண்டு பேர் இருந்திருந்தா இந்தியாவுக்கு இந்த நிலை வந்திருக்காது: கவாஸ்கர்!

November 10, 2017 tamilsamayam.com

இந்திய அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருந்திருந்தால், மிடில் ஆர்டர்ல் இந்த பிரச்சனை வந்திருக்காது என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர் பிரச்சனையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். யுவராஜ் புறக்கணிக்கப்பட்ட பின் இந்திய அணியில் ’நம்பர்-4’ பேட்ஸ்மேன் இடம் காலியாகவே உள்ளது.

இந்த இடத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 6 வீரர்களை இந்திய கேப்டன் விராட் கோலி களமிறக்கி சோதித்தார். ஆனால் யாராலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டிய ஒரு சில போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி அசத்தினார்.

பின் தினேஷ் கார்த்திக் தன்னால் அந்த இடத்தில் ஓரளவு கைகொடுத்தார். இருந்தாலும் இவருக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர், யுவராஜ், ரெய்னா உள்ளிட்ட வீரர்களை தேர்வு செய்ய பரீசிலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்,

“இந்திய அணியின் மிடில் ஆர்டரை பார்த்தால், ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லாமல் உள்ளது. துவக்கத்தில் ஷிகர் தவான் உள்ளது போல, மிடில் ஆர்டரிலும் கண்டிப்பாக ஒரு இடது கைபேட்ஸ்மேன் இருந்தால், எதிரணி வீரர்களுக்கு கடும் சவாலாக அமையும். அது யுவராஜ் சிங், ரெய்னா இருந்த வரை சிறப்பாக இருந்தது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அதே நேரம் அவர்களை மீண்டும் தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க