November 10, 2017 தண்டோரா குழு\
70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி சேவை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிச் சென்று வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செயல்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பணம் போடுதல், எடுத்தல், காசோலைகள் மற்றும் டி.டி. போன்ற அடிப்படை சேவைகளை வீட்டிற்கு சென்று வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும்,இந்த புதிய வசதி பயணாளிகளுக்கு சென்று சேரும் வகையில் வங்கிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.