November 10, 2017
தண்டோரா குழு
மச்சான்ஸ் என்ற வார்த்தையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நமீதா. இவர் அண்மையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த BiggBossநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், நமீதாவுக்கு, வீரா என்பவருடன் வரும் நவம்பர் 24ம் தேதி திருமணம் நடிக்கவுள்ளது. இந்த தகவலை நமீதா ஒரு வீடியோ மூலம் கூற, அந்த வீடியோவை BiggBossபுகழ் ரைசா தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நமீதா வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
இது காதலுக்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். வீரா எனக்கு கிடைத்து அதிர்ஷ்டம்.அவருடைய கனிவால் ஆண்களின் மீதான நம்பிக்கை மீண்டும் துளிர்ந்துள்ளது எனக் கூறியுள்ளார்.