November 11, 2017
tamilsamayam.com
ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பயஸ் – பூரவ்:
ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நாக்ஸ்வில் நகரில் நடைபெறுகிறது. இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை பிரிட்டனின் மார்கஸ் வில்லிஸ் – லியாம் பிராடே இணையை எதிர்கொண்டது.
இதில் முதல் இரண்டு செட்களையும் 7-5, 6-0 என பயஸ் இணை கைப்பற்றியது. இதன்மூலம் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இந்த இணை தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொஃப்ஸ் – பிரட்டனின் ஜோ சலிஸ்பரியை எதிர்கொள்ளும்.
நெடுஞ்செழியன் – கிரிஸ்டோபெர்:
இதே போல, ஜப்பானில் நடைபெறும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் – இந்தோனேசியாவின் கிரிஸ்டோபெர் ரங்கட் இணை இறுதிக்குப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த இணை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட் – பிராட்லி மவுஸ்லே இணையை 6-7, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் ஜப்பானின் பென்
மெக்லச்லென் – யசுடாகா யுசியாமா இணைக்கு எதிராக களமிறங்க உள்ளது.