November 13, 2017
tamilsamayam.com
இந்தூாில் நடைபெறவுள்ள தேசிய மல்யுத்த போட்டியில் சுஷில் குமாா் 3 வருடங்களுக்குப் பிறகு பங்கேற்க உள்ளதாக தொிவித்துள்ளாா்.
ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் சுஷில் குமாா். கடந்த 2014-ல் இருந்து சுஷில் குமார் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது இந்தூரில் 15-ந்தேதி தொடங்க இருக்கும் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.
74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் சுஷில் குமார், தினேஷ் உடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார். சுஷில் குமார் பங்கேற்கும் நிலையில், மற்றொரு வீரர் யோஷ்வர் தத் தன்னால் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் காயம் காரணமாக சுஷில் குமார் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் நர்சிங் ரியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதியானார். தனக்கும் நர்சிங் யாதவிற்கும் போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவரை ரியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று சுஷில் குமார் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக கோர்ட் வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷில் குமார் கடைசியாக 2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தங்க பதக்கம் வென்றார். அதன்பின் தற்போதுதான் களம் இறங்க இருக்கிறார்.