• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக கோவையில் நாளை ஆளுநர் பன்வாரில் புரோகித் ஆய்வு

November 13, 2017 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக ஆளுநர் பன்வாரில்புரோகித் கோவை மாவட்ட அரசு அலுவலகங்களைப் பார்வையிட உள்ளார்.

பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து அரசு அலுவலகங்களில் திடீரென நுழைந்து அரசு அதிகாரிகளுக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார். ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் நம் அலுவலகத்திற்கு நுழைவார் என அரசு அதிகாரிகளும் உஸாராக இருந்து வருகிறார். ஆளுநர் கிரண்பேடியின் இந்த அதிரடி ஸ்டைலை தற்போது தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித்தும் தொடங்க உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பன்வாரிலால் அரசு நிர்வாகத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை இருப்பது பற்றி நான் கவனிப்பேன். அந்த வகையில் தனது நடவடிக்கையை நாளை துவங்கவுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் இப்பட்டமளிப்பு விழா முடிந்த கையோடு தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல்துறை ஆணையர் மற்றும் எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.அப்போது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தாங்கள் துறையைப் பற்றி ஆளுநருக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்துகிறாராம். அதேபோல் அமைச்சர்கள் சிலருக்கும் ஆளுநர் பன்வாரிலால் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாராம்.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பன்வாரிலால் இதுபோன்ற அதிரடி ஆய்வுகளில் இறங்குவது ஒன்றும் புதிதல்ல. அவர் அசாம் மாநில ஆளுநராக பதவி வகித்த போதே இதுபோன்ற திடீர் ஆய்வுகளால் அதிகாரிகளைக் கலங்க வைத்துவிடுவாராம். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஸ்டைலில் தமிழகத்தில் ஆளுநர் களம் இறங்கியிருப்பது தான் தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க