November 14, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட மையத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுடன் தேசிய குழந்தைகள் தினம் குதுகுலமாக கொண்டப்பட்டது.
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.இன்றைய குழந்தைகள் தான் நாளைய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள் என பலதுறைகளில் சாதனை படைக்கவுள்ளனர்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அன்பையும், பண்பையும் நாம் தான் கற்றுத்தர வேண்டும். ஆண், பெண் பாகுபாடின்றி குழந்தைகளை சமமாக வளர்க்க வேண்டும். இதன் மூலம் வருகின்ற சமுதாயத்தில் இன்னும் ஓரளவிற்கு பாகுபாடுகள் குறையும். எனவே குழந்தைகளை மன ஆரோக்கியமாகவும், உடல் ஆரோக்கியமாவும் வளர்ப்பது நம் ஒவ்வொருக்கும் உள்ள பொறுப்பு
என்பதை வலியுறுத்தி கோவை ராஜ வீதியில் உள்ள அரசு பள்ளியில் கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட மையத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுடன் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் குழந்தை தொழிலாளர் குறித்த மாணவர்கள் படைப்புகள் காட்சி வைக்கப்படிருந்தது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக 50 கிலோ எடை உள்ள கேக்குகளை குழந்தைகள் வெட்டி கொண்டாடினர்.நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மையம் செய்திருந்தது.