November 14, 2017 தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கை கங்கா குமாரி முதல்முறையாக பாதுகாப்புபடை காவலராக
பதவியேற்கவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாக்ஹாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கா குமாரி(24). இவர் ஒரு திருநங்கை. கடந்த 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் காவல்துறையில் 12,178காவலரை ஆட்சேர்ப்புகான விளம்பரம் வெளியானது. அந்த பணிக்கு சுமார் 1,25,000 பேர் தேர்வு எழுதினர். அப்போது 22 வயதான கங்கா குமாரியும் தேர்வு எழுதினார். தேர்விலும் உடல் பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். ஆனால்,உடல் பரிசோதனை முடிவு வெளியானபோது, அவர் ஒரு திருநங்கை என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு காவலர் பணி வழங்கப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி,அவரை பணியில் சேர அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பாதுகாப்பு படை காவலராக பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2௦15ம் ஆண்டு, திருநங்கை சமூகத்தை மூன்றாவது பாலினமாக உச்சநீதிமன்ற ஒப்புக்கொண்டு, அவர்களுடைய சமூக மற்றும் பொருளாதார போராட்டத்தை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கல்வி நிறுவனம் வேலைவாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.