• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நடைமுறைகள்

November 14, 2017 தண்டோரா குழு

சென்னை இந்திய விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து
2018-2019(ஆண்-பெண்) ஆண்டுக்கான சேர்க்கை தேர்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இந்திய விளையாட்டு பயிற்சி மையம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் விஞ்ஞானபூர்வமான பயிற்சியும் மேலும் பல வசதிகளும் செய்து கொடுத்து தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் தரத்தை உயர்த்துகிறது.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டு அதிகாரிகளிடமிருந்தும், மாவட்ட உடற்பயிற்சி அதிகாரிகளிடமிருந்தும் மாவட்ட விளையாட்டு அமைப்புகளிடமிருந்தும் மற்றும் உதவி இயக்குனர், இந்திய விளையாட்டு ஆணையம் அவர்களிடமிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 2017 நவம்பர் 15ம் தேதி.

image1

விளையாட்டு வீரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

1. விளையாட்டு சான்றிதழ்கள்
2. வயது நிருபண சான்றிதழ்கள்
3. அரசு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருத்துவசான்றிதழ்
4. ரேசன்கார்டு நகல்
5. 03 பாஸ்போர்ட் அளவு போட்டாக்கள்
6. பள்ளி முதல்வர் அல்லது விடுதி காப்பாளரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ்
7. ஆதார்கார்டு
8. ஹீமோகுளோபின் மற்றும் இரத்த குரூப் வகை பரிசோதனை நிலையத்திலிருந்து
பெறப்பட்டசான்றிதழ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் மட்டும் இணைந்து சுய மற்றும் ஒப்பம் அளித்து அனுப்பவேண்டும்.மேலும்,உண்மை சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

விண்ணப்பத்தாரருக்கு வேண்டிய தகுதி நிர்ணயம்

பகுதி -1:-

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மண்டலஅளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக் கொண்டவர்கள்.

அணி விளையாட்டு 2016-2017 மற்றும் 2017-18 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து விளையாட்டு அணிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்கள் மட்டும்.

பகுதி 2:-

2016-2017,2017-2018ஆண்டுகளில் நடைபெற்றஅனைத்து விளையாட்டு அணிகளில் மாவட்ட அளவிலான முதல் இரண்டு இடங்களை பெற்ற வீரர்கள் மற்றும் மாவட்ட அளவில் கலந்துக் கொண்டவர்களில் தனிச்சிறப்பு தகுதி உடையவர்களும் மிகச் சிறந்த உயரம் உள்ள மாணவர் மற்றும் மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்)

விண்ணப்பிக்க வயது வரம்பு 01.04.2018 அன்று குழு விளையாட்டுக்கு 10-14 வயது (தனி நபர் விளையாட்டுக்கு 12 வயதிலிருந்து 18 வயது வரை உட்பட்டோராக இருக்க வேண்டும்.

இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டும் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு செய்துக் கொடுக்கப்படும் வசதிகள்.

1. தகுதி மற்றும் அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள் மூலம் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு
தினமும் திட்டமிட்ட விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிக்கப்படும்.

2. மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கான உதவி
செய்யப்படும்.

3. மேலும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெரும் மாணவர்மற்றும் மாணவியர்களுக்கு இலவச உணவும்
விளையாட்டுஉபகரணங்களும் கொடுக்கப்படும்.

4. விடுதியில் தங்கா மாணவ மாணவியர்களுக்கு மாதம் 6௦௦/- வீதம் 10 மாதங்களுக்கு
ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும். மேலும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும்.

தகுதியுடைய மாணவர் மற்றும் மாணவியர்கள் மட்டும் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.தகுதி தேர்வு நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கு (ஆண்-பெண்) தங்கும் வசதி, உணவுப்படி, மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க