November 15, 2017
tamilsamayam.com
லண்டனில் நடைபெற்றுவரும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்.
லண்டனின் ஏடிபி பைனல்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தனது பிரிவில் இருக்கும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 20 வயதான அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை எதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி, சுமார் 2 மணிநேரம் 11 நிமிடங்கள் நீடித்தது. இறுதியாக ரோஜர் பெடரர் 7-6 (8-6), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.