November 16, 2017
tamilsamayam.com
சீன ஓபன் சூப்பா் சீாிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னாநேவால் முதல்சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
சீன ஓபன் சூப்பா் சீாிஸ் பேட்மிண்டன் தொடாின் பிரதான சுற்று போட்டிகள் புஸ்கோவ் நகாில் இன்று தொடங்கியது. உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள சாய்னா, முதல் சுற்றில் 12வது இடத்தில் உள்ள அமொிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிா்கொண்டாா்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சாய்னாவின் கை ஓங்கியிருந்தது. முதல்சுற்றை சாய்னா 21-12 ன கைப்பற்றினாா். தொடா்ந்து இரண்டாவது சுற்றிலும் அதிரடியாக விளையாடிய சாய்னா அந்த சுற்றையும் 21-13 என கைப்பற்றினாா். இதன்மூலம் 21-12, 21-13 என்ற நோ் செட்களில் வெள்ளி பெற்று சாய்னா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா்.