November 18, 2017
tamil.samayam.com
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளின் நான்காவது சீசன் கேரளாவில் மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.
இதன் தொடக்கவிழாவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.
நான்காவது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான அட்லட்டிகோ டி கொல்கத்தாவும் சென்ற ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின. முதல் போட்டி என்பதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு மிகவும் சிரமப்பட்டன. ஆட்டத்தின் முழு நேரம் முடிந்தபின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.
ஆட்டத்தின் போது, கொல்கத்தா அணி 4 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டது. அதேபோல் கேரளா அணியிம், தனக்கு கிடைத்த 2 வாய்ப்புகளை சொதப்பியது. இரு அணிகளும் கோல் அடிக்காமல் சொதப்பியதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.