November 20, 2017
tamilsamayam.com
பாகுபலி படத்துக்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படம் என்ன என்று தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இவர் ராம்சரணை வைத்து 2019ல் படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
தவிர, வேறு ஒரு படம் பண்ண இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது இவரின் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் எழுதியிருக்கும் புதிய கதையின் படப்பிடிப்பை வரும் ஜனவரி (2018) தொடங்க உள்ளார்.
டபுள் ஹீரோ படமாக இது உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும். இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். கன்னட நடிகர் சுதீப்பும் இதில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இது பாகுபலி ‘பார்ட் -3’ என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.