• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபிகா படுகோனை உயிரோடு எரித்தால் 1 கோடி – ஷத்ரிய மகாசபா அறிவிப்பு

November 20, 2017 தண்டோரா குழு

நடிகை தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா அறிவிந்துள்ளது.

நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’பத்மாவதி’. இப்பபடம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.

படத்தில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஆனால் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு அமைப்பினர் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா என்ற அமைப்பின் இளைஞர் அணித் தலைவர் புவனேஸ்வர் சிங்கின் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரும் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாகாது என இயக்குநர் சஞ்சய் லீலா தெரிவித்து உள்ளார்.

மேலும், பத்மாவதி திரைப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க