November 20, 2017 தண்டோரா குழு
கோவையில் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தில் சட்ட மீறல் ஏதும் இல்லை என்றும் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது அல்ல என்றும் கோவையியில் நடத்தப்பட்ட ஆய்வுகுறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் கடந்த வாரம் அரசு உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனம் செய்தன. இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாகவும் குற்றம்சாட்டின.இந்நிலையில் இது தொடர்பாக இன்று ஆளுநர் ஆளுநரின் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் மத்திய அரசின் தூண்டுதல் பேரில் ஆளுநர் செயல்படவில்லை.அரசியல் நோக்கத்துடன் ஆளுநர் செயல்டுவதாக கூறுவது கற்பனையான புகார். ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்தின்படி சரியானது தான். ஆளுநரின் நடவடிக்கை எதிலும் அரசியல் சார்பாக இருக்காது. தமிழ் நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும் தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற்றுத்தரவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார் எனவும் முதன்மைச் செயலர் கூறியுள்ளார்.
மேலும், அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை ஆளுநர் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் ஆளுநரின் செயலர் கூறியுள்ளார்.