November 21, 2017
tamilsamayam.com
வீரம், வேதாளம், விவேகம் என தல அஜித்தை வைத்து மூன்று ஹாட்ரிக் படங்களை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க உள்ளதாகவும், அதை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், விவேகம் படம் மாதிரி அதிக நாட்கள் எடுக்காமல், குறுகிய கால தயாரிப்பாக உருவாக்கும் நோக்கத்துடன் படப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திரைக் கதையை இறுதி செய்யும் பணி நடப்பதாகவும், தொடர்ந்து நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணிபுரியவுள்ளார்.
இப்படம் விரைந்து முடித்து வரும் சுதந்திர தினம், சரஸ்வது பூஜை அல்லது தீபாவளி விடுமுறை நாளில் வெளியிடும் முனைப்பில் பணி மேற்கொள்ளப்படும் என படக்குழு தீர்மானித்துள்ளது.