November 21, 2017 தண்டோரா குழு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர் கே நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆா்.கே.நகா் இடைத்தோ்தலை உடனடியாக நடத்தக் கோாி கே.கே.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் வருகிற டிசம்பா் 31ம் தேதிக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணைத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆா்.கே.நகரில் உள்ள போலி வாக்காளா்களை நீக்கிய பின்னரே தோ்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க.வைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாரதி தொடா்ந்த வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு சம்பந்தமாக இன்று நடைபெற்ற விசாரணையில் ஆா்.கே.நகா் தொகுதியில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வாக்காளா்கள் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேலும் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விவரம் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து இடைத்தோ்தலை டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்கும் வகையில் தோ்தல் பணிகளை தொடங்குமாறு தோ்தல் ஆணையத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.