November 21, 2017
தண்டோரா குழு
அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. பின்னர் பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் சமீபத்தில் திருமணம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து தற்போது ஆர்யா மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ஆம் நான் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறேன். மேலும் உங்களுக்கு என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றால் 73301 73301 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்க என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஆர்யாவின் இந்த வீடியோவை பார்த்து த்ரிஷா, ஜெயம் ரவி, சித்தார்த், சதீஷ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் அவரை டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.