November 22, 2017
tamilsamayam.com
இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அந்த வானம் மட்டுமே எல்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் இந்திய அணி பவுலர்கள் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி தட்டுத்தடுமாறி போட்டியை ‘டிரா’ செய்தது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ‘டக்’ அவுட்டான இந்திய கேப்டன் கோலி, இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து சரியான பதிலடி கொடுத்தார். இது கோலியின் 50 சர்வதேச சதமாக அமைந்தது.
இந்நிலையில், வானமே எல்லையாக கொண்டு கோலி செல்வதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.