November 22, 2017 தண்டோரா குழு
போக்குவரத்து நிறுத்தங்களில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நிறுத்தங்களில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்றும் அதே நேரத்தில் சாலையை ஃபார்முலா ஒன்(Formula 1)தடங்கள் (Formula 1 race track)போல பயன்படுத்துபவர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய நாட்டின் போக்குவரத்து பிரதிநிதிகள் மற்றும் ரயிவே காவல்துறையினரை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசினார்.அப்போது“சாலையில் வாகனத்தில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் கைபேசியை தவறாக பயன்படுத்துதல் அல்லது சாலை பாதுகாப்பு சட்டங்களை கீழ்படியாமல் இருப்பதால், அதனால் வரும் விளைவுகளை உணராமல் இருக்கின்றனர்.
மேலும், சாலையில் பொறுமையோடு செல்ல மனமில்லாமல், மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு வேகமாக பயணம் செய்வதால், சாலைகள் ஃபார்முலா ஒன்(Formula 1)தடங்களாக மாற்றப்படுகிறது.
எனினும், காவல்துறையினர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது “கருணை” காட்ட வேண்டும் என்றும், நான் இப்படி சொல்வதால் அவர்கள் செய்த குற்றங்களுக்கு துணை நிற்பதாக கருதக்கூடாது. அந்த நபர் செய்த தவறை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அந்த நபரின் நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள காரணத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்”என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் கூறினார்.