• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசியர் கண்டித்ததால் சத்தியபாமா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

November 22, 2017 தண்டோரா குழு

சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவியை, பேராசியர் கண்டித்ததால் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராகமோனிகா. இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் கணினியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் இராகமோனிகா, சக மாணவி ஒருவரின் விடைத்தாளை பார்த்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பேராசிரியர் ஒருவர் ராகோனிகாவை கண்டித்து தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

மேலும் மாணவியை ஆடையை கலையச் சொல்லி அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் பல்லைக்கழக விடுதிக்குச் சென்ற ராகமோனிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் விடுதிக்குச் சென்ற சக மாணவிகள் ராகமோனிகா தற்கொலை செய்து கொண்டதையறிந்து, பல்லைக்கழக நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார், இராகமோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க