November 23, 2017 தண்டோரா குழு
ஜெ.மரணம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் மாணவி நந்தினி மனு அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2 ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கைரேகை தொடர்பாக திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன்,இரண்டாவது நாளாக இன்றும் நேரில் சென்று விளக்கம் அளித்தார். அடுத்தபடியாக இரண்டு அரசு மருத்துவர்களும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் எந்த நேரத்திலும் ஜெ மரனம் குறித்த சந்தேகங்களுக்கு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என விசாரணை கமிஷன் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு கொடுத்துள்ளார்.
அதைப்போல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திடம் டிராபிக் ராமசாமி பிராமண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் தன்னையும் விசாரிக்க வேண்டும் என ஆணையத்திடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.