November 23, 2017
தண்டோரா குழு
கோபி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் அறம்.
சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் இப்படம் சென்னையில் மட்டும் ரூ.1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அறம் படம் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும், தனக்கு படத்தில் இரு காட்சிகள் பிடிக்கவில்லை என்று கூறியுள்ள அவர், “இறுதியில் தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் ஹீரோ, அவனை கொண்டாவில்லை என்பது வருத்தம். இரண்டாவது குழியில் இருந்து வெளியே எடுத்த அச்சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யாமல் அவரது காலில் விழ வேண்டிய அவசியம் என்ன?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.