• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது எப்படி?

November 23, 2017 தண்டோரா குழு

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து. அதைபோல் அதிமுக என்ற பெயரை எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.இதற்கிடையில் ஒபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தது.

இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இரட்டை இலை சின்னம் கிடைத்தது எப்படி?

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இரட்டை இலை சின்னம் ஒதுக்க என்ன காரணம் என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அதில், மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில், 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது.தினகரன் தரப்பில் தாக்கலான 1280 , பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது.

கட்சியின் பொதுக்குழுவே தொண்டர்களின் பிரதிபலிப்பாக கொள்ள முடியும்.தினகரன் அணிக்கு 20 , பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர்.அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது. லோக்சபாவில் 34 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும் ஆதரவாக உள்ளனர்.

ராஜ்யசபாவில் முதல்வர் அணிக்கு 8 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும், ஆதரவாக உள்ளனர். ஆகையால் மார்ச் 22 ம் தேதி இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால், அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம்.

அ.தி.மு.க.,கட்சி,கொடி,அலுவலகம் அனைத்தும் பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம்.அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபா உரிமை கோர முடியாது ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி கட்சி குழப்பத்தின் போது எடுக்கப்பட்ட முடிவே இப்போதும் எடுக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க