November 23, 2017 தண்டோரா குழு
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை சேவை (நம்பிக்கை மையம்) 1997-ம் ஆண்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவதாக துவங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் சேவையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
தழிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 2164 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் 16 நடமாடும் மையங்களும் செயல்படுகின்றன. இந்த மையங்களில் ஆண்டுதோறும் சுமார் 40 இலட்சம் பொதுமக்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் இலக்கு மக்களுக்கு பரிசோதனை
மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த மையங்கள் துவங்கி 20 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சின்னம் மற்றும் சொற்றொடர் வடிவமைக்கும் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சின்னம் மற்றும் சொற்றொடர் தமிழகத்தில் உள்ள அனைத்து ICTC மையங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.