November 23, 2017
தண்டோரா குழு
கெளதம் மேனன் இயக்கத்தில் என்ன நோக்கி பாயும் தோட்ட படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருபவர் மேகா ஆகாஷ். இவர் நாயகியாக நடித்து தெலுங்கில் ஒரு படம் வெளியாகியிருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் தற்போதே அதிகளவில் உள்ளனர்.
இவர் தமிழில் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மேகா ஆகாஷ், கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தில் மேகா ஆகாஷ் விஸ்காம் படிக்கும் மாணவியாக நடிக்கிறாராம்.
மேலும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் கமிட் செய்யப்பட்டுள்ளார் என்று இப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.