November 24, 2017
கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.
எதிர்கால வாக்காளர்களாகிய பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், எதிர்கால வாக்காளர்களாகிய மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,9,10,11,12- ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி, மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் வினாடி வினா போட்டியை நடத்துகிறது.
கோவை மாவட்டத்தில்,53 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 106 மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகள்,நவ 27 அன்று காலை 10 மணியளவில் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற
உள்ளது.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் கௌரவிக்கப்படுவதுடன், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்படுவார்கள்.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பள்ளியிலிருந்து இரு மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பபடுவார்கள்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.