November 25, 2017
tamilsamayam.com
டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் அஹமது செஷாத். இதன் மூலம் தன்னை சீண்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் வாயை அடைத்துள்ளார் செஷாத்.
பாகிஸ்தானில் தேசிய டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் அஹமது செஷாத் இன்னும் 17 ரன்கள் எடுத்தால், டி-20 அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை நோக்கி செஷாத் களமிறங்கினார்.
இவர் இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்து இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் எட்டிய, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கின் சாதனையை (182 இன்னிங்ஸ்) தற்போது செஷாத் (181 இன்னிங்ஸ்) முறியடித்தார்.