November 27, 2017 awesomecuisine.com
தேவையான பொருட்கள்
கறிவேப்பில்லை – 75 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
புளி – கோலி குண்டு அளவு
கடலை பருப்பு – முக்கால் தேகரண்டி
உளுத்தம் பருப்பு – முக்கால் தேகரண்டி
மிளகு – முக்கால் தேகரண்டி
காய்ந்த மிளகாய் – ஆறு
சீரகம் – முக்கால் தேகரண்டி
வெந்தயம் – முக்கால் தேகரண்டி
கடுகு – அரை தேகரண்டி
தனியா – முக்கால் தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை லேசாக எண்ணெய் ஊற்றி வறுத்து, ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும்.
பின், அதில் கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
கறிவேப்பில்லை பச்சை வாசனை பொய், தொக்கு போல் வந்தவுடன் எடுத்து வைத்து கொள்ளவும். பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.