November 28, 2017 தண்டோரா குழு
பாட்னாவில் தாயின் மருத்துவ கட்டணத்தை செலுத்த 7 வயது சிறுவன் தெருவில் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவை சேர்ந்தவர் லலிதா தேவி(31). கடந்த 14ம் தேதி பிரசவத்திற்காக அங்கிருந்த மாஷீதலா தனியார் மருத்துவமனையில் ஒரு ஏஜெண்ட் உதவியுடன் சேர்க்கப்பட்டார்.
லலிதாவின் சிகிச்சைக்கு 1.5 லட்சம் கட்ட வேண்டும் என்று தொடக்கத்தில் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு,சிகிச்சை தொகையில் 7௦,௦௦௦ ரூபாய் என்று குறிக்கப்பட்டது. லலிதா கணவர் 25,௦௦௦ ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்று அந்த ஏஜெண்ட் கூறியுள்ளார். இதையடுத்து லலிதாவின் கணவரும் அந்த தொகையை மருத்துவமனையில் கட்டியுள்ளார்.
ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது.அதன் பிறகு, 70,000 ரூபாய் மருத்துவ தொகையை கட்டினால் மட்டுமே லலிதாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்ல முடியும் என்று அந்த மருத்துவமனையின் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரித்தனர். உடனே அவரும் தன்னுடைய உறவினர்கள் உதவியுடன் மேலும் சிறு தொகையை கட்டினார். மீதி தொகையை கட்ட தந்தை சிரமம்படுவதை கண்ட லலிதாவின் 7 வயது மகன் தெருவில் பிச்சை எடுத்தான். அப்படி தெருவில் பிச்சை எடுத்த சிறுவனின் நிலை உள்ளூர் ஊடகங்கள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து,மதேபுரா எம்பி இந்த விவகாரத்தில் தலையிட்டு, லலிதாவை மருத்துவமனையில் இருந்து விடுவிக்க உதவி செய்துள்ளார். அந்த தனியார் மருத்துவமனை மீது ஏப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் லலிதாவுக்கு அந்த மருத்துவமனை 1௦,௦௦௦ ரூபாய் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.