November 29, 2017
tamilsamayam.com
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஜோடி, தென் கொரியாவின் சயிவான் மற்றும் கிம் ஜங்ஹோ ஜோடியை எதிர்கொண்டது.
இதில் தென் கொரியா அணி 157-153 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கஜகஸ்தான் அணி 155-151 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.