November 29, 2017 தண்டோரா குழு
ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் “Pink Promise” என்று பெயரிடப்பட்ட வைரம் சுமார் 32.16 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
ஹாங்காங்கில்உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தினர், செவ்வாய்க்கிழமை “Pink Promise” என்று பெயரிடப்பட்ட ஓவல் வைரத்தை ஏலம் விட்டனர். அந்த வைரம் சுமார் 14.93-காரட் எடையுடையது. அது 32.16 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு, 10.78 மில்லியன் டாலருக்கு ஹாங்காங்கில் விற்கப்பட்ட ஐந்து-காரட் “Vivid Pink”க்கு அடுத்ததாக, இந்த வைரம் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டது என்று கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனாவின் சாங் வம்சத்தைச் சேர்ந்த 1,000 வயதுடைய கிண்ணம் ஒன்று, கடந்த மாதம் நடந்த ஏலத்தின்போது,37.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அதேபோல், சொதேபி ஏல நிறுவனத்தால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் “Pink Star” என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டு உலக சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.